×

நீடாமங்கலத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு 2,000 டன் நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைப்பு

நீடாமங்கலம் : நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து 42 வேகன்கள் மூலம் இரண்டாயிரம் டன் நெல் மூட்டைகள் அரவைக்கு கிருஷ்ணகிரிக்கு அனுப்பப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், கூத்தாநல்லூர், மன்னார்குடி உள்ளிட்ட தாலுக்கா பகுதிகளில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி செய்த நெல்களை தனியார் முகவர்களிடமிருந்து அரசு பெற்று அரவை செய்த அரிசிகளை மத்திய சேமிப்பு கிடங்கு பாமனி மற்றும் வட்ட கிடங்குகளில் சேமித்து வைத்த அரிசி மூட்டைகள் மற்றும் தாலுக்கா பகுதிகளில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்களில் சேமித்து வைத்துள்ள நெல்மூட்டைகள் அரவைக்கும், அரிசி மூட்டைகள் பொது விநியோக திட்டத்திற்கும் பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரயில் பெட்டிகளில் அனுப்பப்படுகிறது.

 இந்நிலையில் நேற்று திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் தாலுக்கா பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து 158 லாரிகளில் 2 ஆயிரம் டன் சன்னரக நெல் மூட்டைகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கிருஷ்ணகிரிக்கு 42 சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் தொழிலாளர்கள் ஏற்றி அரவைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Needamangala ,Kṛṣṇa , Needamangalam: Two thousand tonnes of paddy bundles were sent to Krishnagiri by 42 wagons from Needamangalam railway station.
× RELATED கேரளாவில் எதிர்க்கட்சியினர்...