×

பொதுப்பணித்துறையில் பணியாற்றும் இளநிலை பொறியாளர்கள் 102 பேருக்கு பதவி உயர்வு

சென்னை:தமிழக பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறையில், பல்வேறு காரணங்களால், 10 கண்காணிப்பு பொறியாளர், 116 செயற்பொறியாளர், 492 உதவி செயற்பொறியாளர், 650 உதவி பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதில், உதவி பொறியாளர் பணியிடங்கள் மட்டும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பபடுகிறது.
அதே நேரத்தில் உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டது. இந்த பணியிடங்கள் 3.1 என்கிற அடிப்படையில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இதற்கிடையே கடந்த 2017ம் ஆணடு மார்ச் மாதத்தில் 245 உதவி செயற்பொறியாளர் காலி பணியிடங்களை நிரப்ப அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்மீது, 2018 மார்ச் மாதம் வரை நடவடிக்கை எடுக்காததால் பரிந்துரை பட்டியல் காலாவதியாகி விட்டது.  

இந்த நிலையில், காலி பணியிடங்கள் எண்ணிக்கை 360 அதிகரித்த நிலையில் மீண்டும் பட்டியல் தயார் செய்து பரிந்துரை செய்ய வேண்டும். ஆனால், உதவி பொறியாளர்கள் சிலர் பதவி உயர்வு பட்டியலில் குளறுபடி இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு ெதாடர்ந்தனர். இதனால், பதவி உயர்வு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில், தற்போது மீண்டும் முதுநிலை பட்டியல் தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், கடந்த ஆட்சியில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.ேவலு ஆகியோர் முதுநிலை பட்டியல் தயார் ெசய்து பதவி உயர்வு விரைந்து வழங்க உத்தரவிட்டனர். முதற்கட்டமாக இளநிலை பொறியாளர்கள் 25 சதவீதம் என்கிற அடிப்படையில் 102 பேருக்கு பதவி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Tags : Promotion of 102 Bachelor Engineers working in Public Works
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...