19 மாதங்களுக்குப்பின் ஷீரடிக்கு விமான சேவை துவக்கம்

சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாய்பாபா கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. சென்னையிலிருந்து ஷீரடிக்கு, தினமும் 3 விமான சேவைகள் இருந்தது. கொரோனா காரணமாக, சென்னை-ஷீரடி விமான சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டன. அவ்வப்போது சிறப்பு தனி விமானங்கள் மட்டும் சென்று வந்தன.

இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் 2ம் அலை தமிழ்நாடு, மகாராஷ்டிரா உட்பட நாடு முழுவதும் வேகமாக குறைந்து வருவதால், சென்னையிலிருந்து ஷீரடிக்கு, மீண்டும் விமான சேவையை தொடங்க தனியார் விமான நிறுவனத்துக்கு, சிவில் விமான போக்குவரத்து துறை அனுமதியளித்தது.

இதையடுத்து அக்டோபர் 10ம் தேதி முதல் சென்னை- ஷீரடி- சென்னை விமான சேவைகள் மீண்டும் தொடங்குவதாக, கடந்த முதல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னையிலிருந்து ஷீரடிக்கு 19 மாதம் இடைவெளிக்கு பின்பு முதல் விமானம் 165 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. ஷீரடியிலிருந்து சென்னை வரும் விமானம் நேற்று மாலை 6.35 மணிக்கு 35 பயணிகளுடன் சென்னை வந்தது. 

Related Stories:

More
>