×

தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிப்பு பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு: கரையோரம் மக்களுக்கு எச்சரிக்கை

திருவள்ளூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்தது. ஆந்திராவில் பெய்துவரும் மழையின் காரணமாக கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு தண்ணீர் வந்தது. பின்னர் அங்கிருந்து பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. பூண்டி ஏரிக்கு 1691 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பூண்டி ஏரி நிரம்பியது. இதனால் 35 அடி கொண்ட ஏரியில் தற்போது 33.95 அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உபரிநீர் திறந்துவிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்து, கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். இதன்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு பூண்டி ஏரியில் இருந்து முதல்கட்டமாக ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்படுகிறது.

இதனால் பூண்டி ஏரிக்கு தண்ணீர்வரும் பாதையில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசித்துவரும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.‘’ பூண்டி ஏரியில் இருந்து முதல்கட்டமாக ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மழை நீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீர் திறப்பது அதிகரிக்கப்படும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Burundi Lake Surplus , Poondi Lake, warning
× RELATED என் கனவுத் திட்டமாக தொடங்கி பலரது...