×

தேசிய கொடியை அவமதித்த வழக்கு: எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக விலக்கு

சென்னை:  நடிகர் எஸ்.வி.சேகர் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி வெளியிட்ட யுடியூப் வீடியோ பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகவும், தேசிய கொடியை அவமதித்ததாகவும் தெரிவித்துள்ளார் என்று ராஜரத்தினம் என்பவர் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் தேசிய கொடியை அவமதித்ததாக எஸ்.வி.சேகர் மீது சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கில் ஆஜராக விலக்கு அளிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் எஸ்.வி.சேகர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு மனுதாரர் நேரில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

Tags : SV Sehgar , Case of insulting the national flag: SV Sehgar was excused from appearing in person
× RELATED பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த...