×

காஞ்சிபுரம் மாவட்ட பாலாற்று கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்று கரையோரத்தில் உள்ள 30 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது என கீழ்பாலாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், கலெக்டர் ஆர்த்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கூறியிருப்பதாவது: பாலாற்றின் கிளையாறான பொன்னையாற்றில் 8 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

தற்போது பருவமழை பெய்தால் ஆற்றில் கூடுதலாக தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. எனவே பாலாற்றின் இடது கரையை ஒட்டியுள்ள பெரும்பாக்கம், முத்தவேடு, பிச்சவாடி, விஷார், ஆளவந்தார்மேடு, விப்பேடு, வெங்கடாபுரம், செவிலிமேடு, ஓரிக்கை, சின்ன கயப்பாக்கம், கோயம்பாக்கம், வில்லிவளம், வெங்குடி, வாலாஜாபாத், பழையசீவரம், வலது கரையை ஒட்டியுள்ள கோழிவாக்கம், புஞ்சையரசன் தாங்கல், வளத்தோட்டம் , குருவிமலை, விச்சந்தாங்கல், ஆசூர், அவலூர், அங்கம்பாக்கம், திருமுக்கூடல், பினாயூர், திருமஞ்சேரி, சாத்தனஞ்சேரி, கலியப்பேட்டை, ஒரக்காட்டுப்பேட்டை, காவித்தண்டலம்ஆகிய  கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், களப்பணியாளர்கள் மூலம் நிலைமை கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அடிக்கடி வெள்ள நிலவரங்களை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags : Kanchipuram district , Extreme levels of flood danger were announced in at least two places in Kanchipuram district
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை...