×

அனைத்து சின்னத்திலும் முத்திரையிட்ட வாக்காளர்: வேட்பாளர்கள் நன்கு கவனிப்பால் அங்க ஒரு குத்து!, இங்க ஒரு குத்து!!.. சமூக வலைதளங்களில் பரவல்

நெல்லை: ஊரக உள்ளாட்சி முதற்கட்ட தேர்தலில் நெல்லை அருகே வாக்காளர்களை குளிரவைத்த வேட்பாளர்களை தவிர்க்க மனமின்றி அனைத்து வேட்பாளர்களின் சின்னத்திலும் ஓட்டு குத்திவிட்டு, மறக்காமல் கையோடு எடுத்துசென்று சமூக வலைதளங்களில் பரவ விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த ஒரு படத்தில் தேர்தல் காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும். அதில் வேட்பாளர்களிடம் ஓட்டுக்கு பணம் வாங்கியிருக்கும் நபர், அண்ணே அவர்கிட்ட வாங்கிய காசுக்கு அவர் சின்னத்துல ஒரு குத்து, உங்க கிட்ட வாங்கிய காசுக்கு உங்க சின்னத்துல ஒரு குத்து என்று கூறுவார்.

அதேபோன்று மற்றொருவர், அம்மா சத்தியமா உனக்குத்தான் ஓட்டு போட்டேன் என்று கூறியபடி, கையோடு எடுத்துவந்த தான் வாக்களித்த சீட்டை காண்பிப்பார். தற்போது இந்த காட்சிகள் நிஜமாகவே அரங்கேறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த 6ம் தேதி 5 ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் ஒரு கிராமத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தாங்கள் வெற்றி பெற வேண்டி அப்பகுதி வாக்காளர்களை நன்கு மனம் குளிர கவனித்துள்ளனர்.

வேட்பாளர்களின் கவனிப்பால் நன்றி மறவாத ஒரு வாக்காளர், தன்னை கவனித்த அனைத்து உறுப்பினர்களின் சின்னத்திலும் ஓட்டு குத்திவிட்டு, அதை உறுதிப்படுத்தி காண்பிப்பதற்காக ைகயோடு அந்த சீட்டை எடுத்து வந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் உண்மைதானா? அல்லது வேண்டுமென்றே யாராவது இதுபோன்று தவறான படத்தை பதிவிட்டு குழப்புகின்றனரா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Voter stamped on all symbols: Candidates pay close attention there is a punch !, here is a punch !! .. spread on social media
× RELATED கொடைரோடு பகுதியில் பகலில் வாட்டியது...