×

தீராத தோல் நோயால் அவதிப்படும் நடிகை யாமி கவுதம்

சென்னை: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, இந்தி ஆகிய மொழிகளில் ஹீரோயினாக நடித்து வருபவர், யாமி கவுதம். மேலும், டி.வி தொடர்களிலும், விளம்பர படங்களிலும் நடிக்கிறார். தமிழில் வெளியான கவுரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் ஆகிய படங்களிலும் அவர் நடித்திருந்தார்.
கடந்த 2019ல் வெளியான யூரி - தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்ற படத்தில் நடித்தபோது, அதன் இயக்குனர் ஆதித்யா தர் என்பவரை காதலித்தார். இதையடுத்து இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஜூன் 4ம் தேதி அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், தனக்கு தீராத தோல் வியாதி இருப்பதாக யாமி கவுதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் அவர் கூறியதாவது: சமீபத்தில் நான் சில போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தேன். எனக்கு ஏற்பட்டுள்ள தோல் வியாதியான Keratosis - Pilaris என்ற பாதிப்பை மறைக்க, போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு செல்வதற்கு முன்பு நினைத்தேன். ஆனால், நீ ஏன் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று ஒரு குரல் கேட்டது. அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். இந்த வியாதி இருந்தால், தோலில் சின்னச்சின்ன தடிப்புகள் தோன்றும்.

ஆனால், அது ஒன்றும் மோசம் இல்லை. எனக்கு டீனேஜ் வயதில் இப்பிரச்னை ஏற்பட்டது. இதை குணப்படுத்த முடியாது. பல ஆண்டுகளாக இப்பிரச்னை தொடர்கிறது. ஆனால், இன்றுதான் என் பயத்தை விட்டுவிட்டு, குறைகளை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள தைரியம் வந்தது. அதோடு, என்னைப் பற்றிய உண்மையை அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளும் தைரியமும் ஏற்பட்டது. இந்தக் குறை எனக்கு இருந்தாலும், என்னை நான் அழகாகவே உணர்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Yami Gautam , Dermatologist, Actress, Yami Gautam
× RELATED யாமி கவுதம், பிரியாமணி நடித்த ஆர்டிக்கிள் 370