×

இந்திய சந்தையில் ஜப்பானின் டெங்கு தடுப்பூசி அறிமுகப்படுத்த திட்டம் : நோய் ஆபத்தில் இருந்து 62% தடுப்பதாக ஆய்வில் தகவல்!!

டெல்லி : இந்தியாவில் டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி பெறுவது தொடர்பாக ஜப்பானின் டகேடா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஜப்பானைச் சேர்ந்த மருந்து பொருள் தயாரிப்பு நிறுவனமான டகேடா நாவல் டெங்கு வைரஸை தடுக்கும் டக் 003 தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியானது டெங்குவால் பாதிக்கப்படுவதை ஆரம்பத்திலேயே 62%ம் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு செல்லுவதை 83%ம் தடுக்கிறது.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் டெங்குவால் கடுமையாக பாதிக்கப்படுவதில் இருந்து இந்த தடுப்பூசி தடுப்பதும் ஆய்வக சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தடுப்பூசியை இந்திய சந்தையிலும் அறிமுகப்படுத்த டகேடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் பெறுவது தொடர்பாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. இந்தியாவில் டெங்குவால் ஆண்டுக்கு சராசரியாக 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், டக் தடுப்பூசி நோய் தாக்கத்தையும் உயிரிழப்புகளையும் பெருமளவு குறைக்கும் என்று டகேடா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 


Tags : Japan , இந்திய சந்தை,ஜப்பான் ,டெங்கு,தடுப்பூசி
× RELATED ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!