ஆர்யன் கானின் கைது போலியானது, அடுத்த இலக்கு ஷாருக்கான்: அமைச்சர் நவாப் மாலிக்

மும்பை: ஆர்யன் கானின் கைது போலியானது, அடுத்த இலக்கு ஷாருக் கான் என்று மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய அமைச்சர் நவாப் மாலிக், “ஆர்யன் கானின் கைது போலியானது. கடந்த ஒரு மாதமாக இந்த தகவல் புலனாய்வு நிருபர்களிடம் பரப்பப்பட்டது. அவர்களின் அடுத்த இலக்கு நடிகர் ஷாருக்கான்” என தெரிவித்தார்.

மும்பை சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் அக்டோபர் 3ஆம் தேதி, தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசால் கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், சொகுசு கப்பல் பார்ட்டியில் நடந்த போதைப்பொருள் பயன்பாடு வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களை வரும் 7ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு விடியவிடிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழு, மும்பை மாநகர் உள்பட குறிப்பிட்ட சில பகுதிகளில் சோதனை மேற்கொண்டது.

Related Stories: