மகாளய அமாவாசையை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

திருவள்ளூர்:திருவள்ளூரில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொள்வர்கள். மேலும், கோயில் அருகே உள்ள குளத்தில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவார்கள். பின்னர் சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோயில்களை மூடவும் அறிவுறுத்தியிருந்தது. தொடர்ந்து இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் திரண்டு வருவார்கள் என்பதால் ேநற்று மாலை முதல் இன்று முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. மேற்கண்ட நாட்களில் கோயில் வழக்கமான பூஜைகள் சாமிக்கு நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More