விருதுநகர் அருகே 69 மூட்டை குட்கா பறிமுதல்

விருதுநகர்: விருதுநகர் அருகே லாரியில் கடத்தப்பட்ட 69 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக லாரி ஓட்டுநர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் அருகே கோவில் புலிகுத்தி விலக்கில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தினர். ஆனால், லாரியை ஓட்டுநர் நிறுத்தாமல் சென்றுள்ளார். சந்தேகமடைந்த அதிகாரிகள் லாரியை விரட்டி சென்றனர். கோவில் புலிகுத்தி கிராமத்தில் சங்கிலி கருப்பசாமி (30) என்பவரது வீட்டில், கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்த புகையிலை பொருட்களை இறக்கி கொண்டிருந்தனர். அங்கு சென்ற தேர்தல் பறக்கும் படை சிவகாசி வட்ட வழங்கல் அதிகாரி ஜெயபாண்டி, சிறப்பு சார்பு ஆய்வாளர் இரணியன் மற்றும் தலைமை காவலர் சித்ரா, குருசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் 69 மூட்டை, தடை செய்யப்பட்ட குட்கா புகையிலையை பறிமுதல் செய்தனர்.

 தகவலறிந்த வச்சக்காரபட்டி காவல் ஆய்வாளர் கருப்பசாமி தலைமையிலான போலீசார் வீட்டின் உரிமையாளர் சங்கலி கருப்பசாமி, லாரி ஓட்டுநர்கள் ராமர் (54), மகேஷ் (30) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: