×

சென்னை உட்பட 12 உயர்நீதிமன்றங்களுக்கு விரைவில் 68 ஐகோர்ட் நீதிபதிகள் நியமனம்: உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரை

புதுடெல்லி: நாடு முழுவதும் சென்னை உட்பட 12 உயர்நீதிமன்றங்களுக்கு விரைவில் 68 ஐகோர்ட் நீதிபதிகள் நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ராமன் தலைமையிலான கொலீஜியம் குழு அவ்வப்போது கூடி, உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை தேர்வு செய்து வருகிறது. கொலீஜியம் குழுவானது, தாங்கள் பரிந்துரைத்த பெயர்களை ஒன்றிய அரசுக்கு அனுப்புகிறது. அவர்கள், பரிந்துரைத்த நீதிபதிகளின் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு அனுப்புவர். அதன்பின் குடியரசு தலைவர் முறைப்படி நீதிபதிகள் நியமன பட்டியலை வெளியிடுவார்.

இந்நிலையில், மாநில உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்காக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ராமன் தலைமையிலான கொலீஜியம் குழுக் கூட்டம் சமீபத்தில் கூடியது. அதில், 68 பேரின் பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவர்களின் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கண்ட 68 நீதிபதிகளின் பட்டியல் பல கட்டங்களாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. புதியதாக நியமிக்கப்படவுள்ள 68 பேரில் 10 பெண்கள் உள்ளனர். சென்னை, அலகாபாத், ராஜஸ்தான், கொல்கத்தா உள்ளிட்ட 12 உயர் நீதிமன்றங்களுக்கு 68 நீதிபதிகளின் பெயர்கள் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Chennai ,Supreme Court Collegium Committee , HighCourt, Judges
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...