×

கப்பலில் இருந்து நிலப்பரப்பு சென்று தாக்கும் ஏவுகணை: டிஆர்டிஓ சோதனைக்கு தயார்

புவனேஷ்வர்: இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஐ.டி.சி.எம் என்ற ஏவுகணையை உருவாக்கியுள்ளது. கப்பலில் இருந்து விண்ணில் வீசும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வகை ஏவுகணை நீண்டதூரம் பயணித்து நிலப்பரப்பில் சென்று தாக்ககூடியது. இந்த ஏவுகணை முற்றிலும் உள்ளநாட்டு தயாரிப்பில் உருவானது. இது குறித்து டி.ஆர்.டி.ஓ செய்திக்குறிப்பில், ‘நீண்டதூரம் சென்று தாக்க கூடிய முதல் கப்பல் ஏவுகணை ஐ.டி.சி.எம். கடந்த ஆகஸ்ட் மாதம் இது சோதனை செய்யப்பட்டது. ஆனால் சில சிக்கல் காரணமாக சிக்னல்கள் கிடைக்கவில்லை. தற்போது சீரமைக்கப்பட்டு தயாராக உள்ளது. ஒடிசாவில் உள்ள கடற்கரையில் இருந்து அக்.6 அல்லது 8ம் தேதி ஏவுகணை சோதனை திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Ship-to-surface missile: ready for DRDO test
× RELATED பூஞ்ச் ​​பகுதியில் தீவிரவாத தாக்குதலில் 5 வீரர்கள் காயம்