×

உங்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிச்சயம் நிறைவேற்றுவேன் : மலைவாழ் மக்களிடம் முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதி!

தருமபுரி : மலைவாழ் மக்களின் அடிப்படை தேவைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்துள்ளார். 2 நாள் பயணமாக தருமபுரி சென்றுள்ள அவர், அங்குள்ள வத்தல்மலை மலை கிராமத்தில் 2,116 பயனாளிகளுக்கு ரூ.16.47 கோடி மதிப்பிலான பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் வத்தல்மலையில் மழைவாழ் மக்கள், விவசாயிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது “நினைவு தெரிந்த நாளில் இருந்து எங்கள் ஊருக்கு யாரும் வரவில்லை.” என முதலமைச்சரிடம் கிராம மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, மிளகு,காப்பி,மா,பலா,கமலா,ஆரஞ்சு உள்ளிட்ட உற்பத்தி பொருள்களுக்கு சந்தையில் நேரடியாக விற்க நடவடிக்கை எடுக்க பழங்குடியின விவசாயிகள் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், கருணாநிதி ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட வருமுன் காப்போம் திட்டமும் முடக்கப்பட்டது. தற்போது மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு ஒரு புறம் மருத்துவ நெருக்கடி, மறுபுறம் நிதி நெருக்கடி ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டு வருகிறோம். ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கினோம்.திமுக தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை அளித்தது. அதில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். மீதமுள்ள வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம். தேர்தல் நேரத்தில் ஆதி திராவிடர் நல வாரியம் அமைக்கப்படும் என உறுதி கொடுத்து உள்ளோம்.நிறைவெற்றி தருவோம்.

மகளிர் சுய உதவிக்குழு முதல் முதலில் உருவாக்கப்பட்டது கருணாநிதி ஆட்சியில்தான். கடந்த 10 ஆண்டுகளாக மகளிர் சுய உதவிகளுக்கு எந்த நிதியும் தரவில்லை. கடன் பெற முடியாமல் தவித்து வந்தனர். தற்போது மீண்டும் மகளிர் சுய உதவி குழுவினர் கம்பீரமாக நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.அனைத்து தரப்பினரின் கோரிக்கையும் திமுக அரசு நிறைவேற்றும். பழங்குடியின மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். மலைவாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிச்சயமாக நிறைவேற்றித் தருவேன்.பழங்குடியின மக்களாகிய நீங்கள் எங்களில் ஒருவராக உள்ளீர்கள். உங்களை சந்தித்ததில் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்,என்றார்.


Tags : First Minister BC ,Ka Stalin , மலைவாழ்,மு.க.ஸ்டாலின்
× RELATED திமுக தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள...