×

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 30வது பட்டமளிப்பு விழா

சென்னை: சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 30வது பட்டமளிப்பு விழாவில் சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் ஏ.ராஜராஜன் பங்கேற்று, 3,432 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகழகத்தின் 30வது பட்டமளிப்பு விழா நடந்தது. பல்கலை வேந்தர் மரியஜீனா ஜான்சன், தலைவர் மரிய ஜான்சன் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் (இஸ்ரோ) விஞ்ஞானி ஏ.ராஜராஜன், அக்னி ஏவுகணை விஞ்ஞானி ஜி.ராமகாரு, கெரி இன்டெவ் லாஜிஸ்டிக் நிறுவன தலைவர் சேவியர் பிரிட்டோ, சூர்யா மருத்துவமனை இதய நிபுணர் எம்.ஜெயராஜா, இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோருக்கு பல்கலை வேந்தர் மரியஜீனா ஜான்சன் கவுரவ பட்டம் வழங்கினார். தொடர்ந்து, சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பயின்ற 2,892 மாணவர்களுக்கு பட்டங்களும், 386 பேருக்கு மேல்நிலை பட்டங்களும், பார்மசி துறையில் 10 டிப்ளமோ, 144 பிஎச்டி பட்டங்களும், 24 பேருக்கு சாதனை தங்க மெடல் உள்ளிட்டவைகளையும் சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் ஏ.ராஜராஜன் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

Tags : 30th Graduation Ceremony ,Satyabhama University , 30th Graduation Ceremony at Satyabhama University
× RELATED நெல்லை மனோன்மணி சுந்தரனார் பல்கலை....