×

அஞ்சல் துறையுடன் எல்ஐசி ஒப்பந்தம்

மும்பை:  ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கான கையேட்டை அச்சடித்து தபாலில் அனுப்புவதற்காக,  ‘அச்சிலிருந்து தபாலுக்கு’ என்ற ஒப்பந்தத்தை அஞ்சல் துறையுடன் எல்ஐசி மேற்கொண்டுள்ளது. மும்பையில் உள்ள எல்ஐசி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்த ஒப்பந்தம் உயரதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில், எல்ஐசி தலைவர் எம்.ஆர்.குமார், மேலாண்மை இயக்குநர்கள் முகேஷ்குமார் குப்தா, ராஜ் குமார், மினி இபே, செயல் இயக்குநர் பிரவீன் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

ஒப்பந்தத்தில், தபால் துறை சார்பாக துணை இயக்குநர் ஜெனரல் அஜய்குமார் ராய், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் டி.எம்.லதா, தலைமை அலுவலக தபால் சேவைகள் இயக்குநர் கே.ஏ.தேவராஜ், தெலங்கானா வட்டம் கணேஷ், நவிமும்பை மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் வி.சவலேஷ்கர் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய எல்ஐசி தலைவர் எம்.ஆர்.குமார், ‘‘உரிய நேரத்தில் பாலிசிக்களை அனுப்புவதை எல்ஐசி மிகவும் முக்கியமானதாக கருதுகிறது. இந்த ஒப்பந்தம் மூலம் தெலங்கானா வட்டம் இதை செயல்படுத்த முன்வந்துள்ளது. நாடு முழுவதும் இந்த சேவை செயல்படுத்தப்படும்’’ என்றார்.

Tags : Postal Department, LIC, Contract
× RELATED லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: தெலங்கானாவில் கோரம்