உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களை ஆதரித்து கமல் இன்று பிரசாரம் துவக்கம்

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்குகிறார். இதுகுறித்து மநீம வெளியிட்டுள்ள அறிக்கை: வலுவான உள்ளாட்சிகளே முழுமையான மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தும் என்பது மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்று. இந்த அடிப்படையில் உள்ளாட்சிகளின் மேம்பாட்டுக்காக கருத்தியல் ரீதியிலும், களத்திலும் மநீம தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நடைபெற இருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மநீம தனித்து போட்டியிடுகிறது. மநீம வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் போட்டியிடுகின்றனர். அவர்களை ஆதரித்தும்,  உள்ளாட்சிகளின் உரிமைகளுக்காக உரத்த குரல் கொடுப்பதற்கும் மநீம தலைவர் கமல்ஹாசன் முதற்கட்ட பிரசார பயணத்தை இன்று காஞ்சிபுரம் மாவட்டம் கோவூரில் இருந்து தொடங்குகிறார். வரும் 30ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.

Related Stories:

More
>