காந்தி பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருவள்ளுர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி முற்பகல் 10 மணியளவிலும், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டியும், பிற்பகல் 3 மணியளவிலும், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெறும் பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ₹5 ஆயிரம், 2ம் பரிசாக ₹3 ஆயிரம், 3ம் பரிசாக ₹2 ஆயிரம், வழங்கப்படும். இதேபோல், பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெறும் பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ₹5 ஆயிரம், 2ம் பரிசாக ₹3 ஆயிரம், 3ம் பரிசாக ₹2 ஆயிரம் வழங்கப்படும். மேலும், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப்பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாகத் தெரிவுசெய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ₹2 ஆயிரம் வீதம் வழங்கப்பெறும்.

ஒவ்வொரு கல்லூரி, பள்ளியிலிருந்தும் பேச்சுப்போட்டியில் 2 மாணவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் தங்கள் கல்லூரி முதல்வர், பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து ஆளறிச்சான்று பெற்று போட்டியில் பங்கேற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>