ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச், பிட்னஸ் டிரேக்கர் என அனைத்திற்கும் ஒரே மாதிரியான சார்ஜரை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் முடிவு!!

லண்டன் : மின்னணு கழிவுகள் குவிவதை தடுக்க விரைவில் ஒற்றை சார்ஜர் பயன்பாட்டை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்துள்ளது. ஸ்மார்ட் போன்கள் வருகைக்கு பிறகு சார்ஜரையும் சேர்த்து எந்நேரமும் சுமக்க வேண்டிய நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நிறுவனங்களும் ஒவ்வொரு மாடலை பொறுத்து சார்ஜர்களை தயாரிப்பதால் ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட சார்ஜர்களை வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.

இதனால் மின்னணு கழிவுகளும் அதிகளவில் குவிகிறது. இதனை தடுக்க ஒற்றை சார்ஜர் விதிமுறையை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தற்போது சி வகை சார்ஜர்கள் 38% பயன்பாட்டில் இருப்பதால் அதனையே அனைத்து நிறுவனங்களும் தயாரிக்க வேண்டும் என்ற உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது. ஐரோப்பாவில் ஆண்டுக்கு 11,000 மெட்ரிக் டன் மின்னணு கழிவுகள் குப்பைகளில் கொட்டப்படும் நிலையில், அதனை தடுக்க இது பெரிதும் பயன்படும் என ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஈயர் பட்ஸ், ஸ்மார்ட் பாட்ஸ், பிட்னஸ் ட்ராக்கர் போன்ற கருவிகளும் சி வகை சார்ஜரையே தயாரிக்க வேண்டும் என்று ம் உத்தரவு வர உள்ளது. ஆனால் இது புதுமையை தடுக்கும் என்றும் மாசுபாட்டை அதிகரிக்கும் என்றும் ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

Related Stories:

More
>