75வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டிக்கு அக்.2ல் சிறப்பு மலை ரயில் சேவை

ஊட்டி: ரயில்வே சார்பில் வருகிற அக்.2ம் தேதி மேட்டுப்பாளையம்-ஊட்டிக்கு சிறப்பு நீலகிரி மலை ரயில் இயக்கப்பட உள்ளது. காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு குன்னூர் வந்தடையும். அதன்பின், அங்கிருந்து  12.55 மணிக்கு புறப்பட்டு 2.25 மணிக்கு ஊட்டிக்கு வரும். இந்த  சிறப்பு மலை ரயிலானது 72 முதல் வகுப்பு இருக்கைகளும், 100 இரண்டாம்  வகுப்பு இருக்கைகளும் என 4 பெட்டிகளுடன் இயக்கப்பட  உள்ளது.

மேட்டுப்பாளையம் முதல்  குன்னூர் வரை முதல் வகுப்பு கட்டணமாக ரூ.1100, இரண்டாம் வகுப்புக்கு ரூ.800  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை முதல் வகுப்பு  ரூ.1450ம், இரண்டாம் வகுப்பு ரூ.1050ம் கட்டணமாக வசூலிக்கப்படும். குன்னூர்-ஊட்டி இடையே முதல் வகுப்பு ரூ.550ம், இரண்டாம் வகுப்பு ரூ.450ம்  வசூலிக்கப்படும். எனவே, இந்த சிறப்பு ரயிலில் பயணிக்க விரும்புவோர்  முன்பதிவு செய்து பயணிக்கலாம் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Related Stories: