10 ஆண்டுகளுக்கு மேல் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யாத சங்கங்கள் மீது நடவடிக்கை: பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் நடவடிக்கை

சென்னை: பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அனைத்து மண்டல ஐஜி, மாவட்ட பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், பல சங்கங்கள் தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் 1975ன் பிரிவு 16 (3) (B)ன்படி ஒவ்வொரு நிதியாண்டிற்குரிய ஆண்டறிக்கைகள் உரிய காலக்கெடுவதற்குள் பதிவாளரிடம் தாக்கல் செய்யாமல் தாமதமாக கோர்வைக்கு அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. சங்கம் சர்பில் தாமத பிழைப் பொறுத்தம் செய்திடக் கோரி பெறப்படும் மனுக்கள் மாவட்ட பதிவாளர்களால் பரிசீலிக்கப்பட்டு, தாமத பிழை பொறுத்தம் செய்யப்பட்டு வருகிறது. சங்கங்களின் செயல்பாடுகளை கண்காணித்து முறைப்படுத்த வேண்டியது சங்கப்பதிவாளர்களான மாவட்ட பதிவாளர்களின் பணி ஆகும்.

தங்களது மண்டலத்திற்குட்பட்ட பதிவு மாவட்டங்களில் ஆண்டறிக்கைகளை உரிய காலக்கெடுவிற்குள் கோர்வைக்கு அளிக்காமலும், சங்க பதிவாளரால் பதிவு நீக்கம் செய்யப்படாமலும் செயல்பாட்டில் உள்ள/உள்ளதாக கருத்தப்படும் அனைத்து சங்கங்களின் விவரங்கள் குறித்து மாவட்ட பதிவாளர்களிடம் ஒருங்கிணைந்த அறிக்கை தயாரித்து வரும் 20ம் தேதிக்குள் அனுப்ப அறிவுறுத்தப்படுகிறது. அந்த அறிக்கையில், 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் வரை, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டறிக்கைகள் தாக்கல் செய்யப்படாத, சங்கத்தின் பெயர், பதிவு எண், வருடம், எந்த ஆண்டு முடிய ஆண்டறிக்கைகள் கோர்வைக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, ஆண்டறிக்கைகள் கோர்வைக்கு தாக்கல் செய் தவறிய நிதி ஆண்டுகளின் எண்ணிக்கை, ஆண்டறிக்கைகள் தாக்கல் செய்யாத ஆண்டுகளுக்கு அவை தாக்கல் செய்யப்படின் அவற்றை கோர்வை செய்ய வேண்டி தாமதப்பிழை பொறுத்தம் செய்யப்பட்டால், சங்கத்திடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய உத்தேச அபராத தொகை போன்ற அனைத்து விவரங்களையும் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: