×

விழுப்புரம் அருகே உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கும் கிராமம்!: வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், போஸ்டர்கள் ஒட்டியும் எதிர்ப்பு..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அவியூர் ஊராட்சிக்கு உட்பட்ட விற்பட்டு கிராம மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், போஸ்டர்கள் ஒட்டியும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். அவியூர் ஊராட்சியில் 1100க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பதால் தொடர்ந்து அந்த கிராமத்தினரே ஊராட்சி மன்ற தலைவர்களாக பொறுப்பேற்று வருகின்றனர். அந்த ஊராட்சிக்கு உட்பட்டு விற்பட்டு கிராமத்தில் குறைவான வாக்காளர்களே இருப்பதால் அவர்களால் தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றிபெற முடிவதில்லை.

இதனால் விரக்தி அடைந்த விற்பட்டு கிராமத்தினர், ஜனநாயக அடிப்படையிலான எந்த வசதிகளும் தங்களுக்கு கிடைப்பதில்லை என்றும் விற்பட்டு கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்றும் பலமுறை கோரிக்கைவைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து வீடுகளில் கருப்பு கொடி கட்டியுள்ளனர். அவியூர் ஊராட்சிக்குட்பட்ட விற்பட்டு மற்றும் செத்தவராயநல்லூர் ஆகிய கிராமங்களை இணைத்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என ஆங்காங்கே போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது.


Tags : Vetapuram , Villupuram, Local Election, Village, Black Flag
× RELATED விழுப்புரம் அருகே ஓடும் பேருந்தில்...