×

பேச்சுலர் பார்ட்டியில் மது குடித்தபடி அமலா பால் டான்ஸ்: குவியும் கண்டனம்

சென்னை: மைனா, வேலையில்லா பட்டதாரி, ஆடை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அமலாபால். இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டு பின்பு அவரை விவாகரத்து செய்தார். அதன்பிறகு மீண்டும் நடிக்க வந்தவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. இந்நிலையில் அவரது தம்பிக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. இதற்காக நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தம்பிக்கும், அவரது நண்பர்களுக்கும் பேச்சுலர் பார்ட்டி கொடுத்தார் அமலா பால். இந்த பார்ட்டியில் அமலாபால் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு பாட்டிலுடன் நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ‘பார்ட்டி வைப்பதும், மது அருந்துவதும் அவரது தனிப்பட்ட உரிமை. ஆனால் சினிமாவில் செலிபிரிட்டியாக இருக்கும் அவர் இதனை பொதுவெளியில் பகிர்வதன் மூலம் மது பழக்கத்தை ஊக்கப்படுத்துவது போல இருக்கிறது. குறிப்பாக பெண்கள் மது அருந்துவதை தூண்டுவதாக உள்ளது’ என்று சமூக வலைத்தளங்களில் அவருக்கு கண்டனம் பெருகி வருகிறது.

Tags : Amala Paul ,Speaker's Party , Amala Paul Dance After Drinking Alcohol at a Speaker's Party: Cumulative Condemnation
× RELATED எனது இன்னொரு முகம் ஆடுஜீவிதம் பிருத்விராஜ் நெகிழ்ச்சி