×

கோவை மாநகராட்சியில் தூய்மைப்பணி முகாமினை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

கோவை :  கோவை மாநகராட்சியில் மாபெரும் தூய்மைப்பணி முகாமினை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் மருந்து பெட்டகங்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்ததாவது: தமிழக முதலமைச்சர் தமிழக மக்களுக்காக தினமும் புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்திக்கொண்டு வருகிறார்.  வடகிழக்கு பருவமழை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதால், மேலும் இத்தகைய பாதிப்புகள் நடைபெறாத வண்ணம் தமிழகம் முழுவதும் தூய்மைப்பணிகள் நடைபெறுகின்றது. கோவை  மாநகராட்சியில் இரண்டாவது நாளான நேற்று மாபெரும் தூய்மைப்பணி மூலம் 5 மண்டலங்களிலுள்ள 100 வார்டுகளில் 36.12 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் நடைபெற்றது.

 11வது வார்டுக்குட்பட்ட சாய்பாபா காலனி, கே.கே.புதூர் பகுதியில் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால் கால்வாய்களில் குப்பைகளை முற்றிலுமாக அகற்றி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் சீராக செல்ல ஏதுவாக அமைகிறது. இதன் மூலம் கொசு உற்பத்தியாவதை கட்டுப்படுத்தி டெங்கு, மலேரியா போன்ற நோய்களிலிருந்து பரவாமல் இருக்கும். தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள். நகராட்சிகள். ஊராட்சிகள், பேரூராட்சிகள் போன்ற அனைத்து பகுதிகளிலும் மாபெரும் தூய்மைப்பணி முகாம்கள் மூலம் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதுவரை தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் 59 லட்சத்து 9ஆயிரத்து 167 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். இதில் ரத்த கொதிப்பு உள்ளவர்கள் 2 லட்சத்து 63 ஆயிரத்து 361 நபர்களும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் 1 லட்சத்து 74ஆயிரத்து 855 நபர்களும், இரண்டு இணை நோய் உள்ளவர்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 233 நபர்களும், கோவை மாவட்டத்தில் இரத்த கொதிப்பு உள்ளவர்கள் 7 ஆயிரத்து 775 நபர்களும், சர்க்கரை நோய் பயனாளிகள் 3 ஆயிரத்து 270 நபர்களும், இரண்டு இணை நோய் உள்ளவர்கள் 3 ஆயிரத்து 706 நபர்களும், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரத்த கொதிப்பு உள்ளவர்கள் 2 ஆயிரத்து 550 நபர்களும், சர்க்கரை நோய் உள்ளர்வகள் 1 ஆயிரத்து 456 நபர்களும், இரண்டு இணை நோய் உள்ளவர்களும் 1 ஆயிரத்து 767 நபர்களும், சிறுநீரக நோய் பாதித்த பயனாளிகள் 3 நபர்களும் பயனடைந்துள்ளார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா, நகர பொறியாளர் லட்சுமணன், நகர் நல அலுவலர் தீஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் வசந்த திவாகர், மண்டல உதவி ஆணையாளர் சிவசுப்பிரமணியம். செயற்பொறியாளர் பார்வதி. உதவி செயற்பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Ramachandran ,Coimbatore , Coimbatore: Minister of Forests Ramachandran inaugurated a huge cleaning camp in Coimbatore.
× RELATED பல்லடம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தீவிர பிரசாரம்