கைது வாரன்ட் எச்சரிக்கையால் மும்பை கோர்ட்டில் கங்கனா ஆஜர்

சென்னை: இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தரை பற்றி ஒரு பேட்டியில் தரக்குறைவாக பேசியிருந்தார் கங்கனா. இதையடுத்து கங்கனா மீது அவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் ஆஜராகாமல் கங்கனா இருந்து வந்தார். அடுத்த முறை ஆஜராகாவிட்டால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி கங்கனாவை எச்சரித்தார். இதையடுத்து நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கங்கனா ஆஜரானார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்தார். ஜாவேத் அக்தரும் கோர்ட்டில் ஆஜர் ஆகியிருந்தார்.

Related Stories: