திருவண்ணாமலையில் 19வது மாதமாக கிரிவலத்துக்கு தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இதுவரை கிரிவலத்துக்கு தடை நீங்கவில்லை. தொடர்ந்து 19வது மாதமாக, இம்மாதமும் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டது. புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கி, இன்று அதிகாலை 5.51 மணிக்கு நிறைவடைகிறது. நேற்று கிரிவல பாதை வழியாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.  எப்போதும், பவுர்ணமி நாளில் பக்தர்கள் வெள்ளத்தில் நிரம்பியிருக்கும் கிரிவலப்பாதை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. அதேசமயம் பக்தர்கள் கோயில் ராஜகோபுரம் எதிரே தேரடி வீதியில் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

Related Stories: