மநீம கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு: கமல்ஹாசன் தகவல்

சென்னை: 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6, 9  தேதிகளில் நடத்தப்படுகிறது. காலியாக இருக்கும் பதவிகளுக்கு அக்டோபர் 9ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 22ம் தேதி கடைசி நாள். இத்தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம்,  நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி், அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கமல்ஹாசன்  டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்கி, மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய முனைப்புடன் செயல்படும் மக்கள் நீதி மய்யத்துக்கு, ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக ‘டார்ச்லைட்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: