×

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசிற்கு முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: ஒன்றிய அரசிற்கு தேவையான அழுத்தம் கொடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக கூட்டணிக்கு 38 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்த ஆண்டு இந்திய குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் தேர்தல்கள் வர உள்ளன.

இந்த சூழ்நிலையில், ஒன்றிய அரசிற்கு தேவையான அழுத்தம் கொடுத்து, நீட் தேர்வு ரத்து என்ற அறிவிப்பினை செய்யவும், 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை அமையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

Tags : Chief Minister ,Union Government ,NEET election ,OPS , The Chief Minister should put pressure on the Union Government to cancel the NEET election: OPS demand
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...