உத்தரகாண்ட், கர்நாடகா, குஜராத் போன்று இமாச்சலில் பாஜக முதல்வர் மாற்றம்?: தேசிய தலைவருடன் திடீர் சந்திப்பு

புதுடெல்லி: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை, இமாச்சலபிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் நேற்றிரவு டெல்லியில் திடீரென சந்தித்தால், அவரது தலைமை மாற்றம் குறித்து பரபரபப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சலபிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், அடுத்தாண்டில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை, இமாச்சல் முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் நேற்றிரவு திடீரென சந்தித்தார். ஏற்கனவே, கர்நாடகா, உத்தரகாண்ட், குஜராத் போன்ற மாநிலங்களில் ஆளும் பாஜக முதல்வர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்ட நிலையில், இமாச்சல் முதல்வரின் டெல்லி வருகை தலைநகரில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘மாநிலத்தில் அடுத்தாண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. மீண்டும் பாஜக ஆட்சியை தக்கவைக்கும் வகையில் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்க டெல்லி வந்தேன். மாநிலத்தில் தலைமை மாற்றம் (முதல்வர்) இருக்கும் என்று கூறுகின்றனர். அதுபோன்ற ஊகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. எனது டெல்லி பயணம் 20 நாட்களுக்கு முன்பே திட்டமிட்ட மற்றும் அமைப்பு ரீதியான சந்திப்பாகும். இதுவரை ஒரே மாதத்தில் இரண்டு முறை  டெல்லிக்கு வந்து சென்றுள்ளேன்’ என்றார்.

Related Stories:

>