×

மார்த்தாண்டம் அருகே 80 ஆண்டுகளாக வசிக்கும் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்த ஊர் மக்கள்

மார்த்தாண்டம்:  மார்த்தாண்டம் அருகே 80 ஆண்டுகளாக வசிக்கும் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து| பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை  ஊர்மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி இளம்பிலான்தோட்டம் பகுதியில் குளக்குடிகுளம் அமைந்துள்ளது. இந்ந குளத்தில் கரையோரத்தில் 80ஆண்டுகளுக்கும் மேலாக வயதானோர்கள் பெண்கள் குழந்தைகளுடன் வசித்துவரும் 8 குடியிருப்புகள் மற்றும் தமிழக அரசு அங்கன்வாடிமைய கட்டிடம் ஆகியவை அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி பாகோடு பேரூராட்சி நிர்வாகம் அந்த வீடுகளை இடித்து அகற்ற பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரத்துடன் அப்பகுதிக்கு வந்தனர்.

இதனையடுத்து பாஜக மாவட்ட செயலாளர் சுகுமாரன் தலைமையில், பாஜக மேல்புறம் ஒன்றிய ஊடக, சமூக வலைத்தள பிரிவு செயலாளர் விஜின், முன்னாள் மருதங்கோடு ஊராட்சி தலைவர் சேகர், முன்னாள் பாகோடு பேருராட்சி தலைவர் ஜெயராஜ் உட்பட ஊர்மக்கள் பெண்கள் குழந்தைகளுடன் சாலையில் திரண்டனர். 80ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் தங்களுக்கு மாற்று இடம் வழங்க கேட்டு ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் காவல் ஆய்வாளர் செந்தில்வேல் முருகன் தலைமையிலான காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.


Tags : Marthandam , Has lived near Marthandam for 80 years Resistance to eviction: Villagers capture JCP machine
× RELATED மார்த்தாண்டத்தில் கேரளாவில் இருந்து...