சுசீந்திரம் அருகே வக்கீல்களை கத்தியால் குத்திய தேமுதிக மாவட்ட செயலாளர் கைது

சுசீந்திரம்:  நாகர்கோவிலில் வழக்கறிஞராக உள்ள வினோத் (33) மற்றும் அவரது சக வழக்கறிஞர்களான பாலாஜி ராஜாராம் (34), கோகுலன் ஆகியோர் கடந்த 12ம் தேதி இரவு கோழிக்கோட்டுப்பொற்றை பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது செந்தில்நாதன் என்பவரின் தலைமையில் வந்த கும்பல், இவர்களிடம் தகராறு செய்து தாக்கினர். இதில் பாலாஜி ராஜாராம், கோகுலன் ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி செந்தில்நாதன், தில்லைநாதன், அருள், இளங்கோ, பெல்வின், சுடலை, ஐயப்பன், இந்தியன் சுரேஷ், சஜித் ஆகிய 9 பேர் மீது, கொலை முயற்சி உட்பட 9 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் இந்தியன் சுரேஷ் தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் ஆவார். இவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இவர்களில் 4 பேர் வக்கீல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>