×

ஆரணியில் தொடரும் தரமற்ற உணவு விற்பனை!: பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மீன், நண்டு உள்ளிட்ட 15 கிலோ அழுகிய இறைச்சி பறிமுதல்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இறைச்சி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் நான்காவது நாளாக அதிரடி சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 15 கிலோ அழுகிய இறைச்சியை பறிமுதல் செய்தனர். ஆரணியில் கடந்த 8ம் தேதி 7 ஸ்டார் என்ற அசைவ உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டு லோஷிகா என்ற 10 வயது சிறுமி உயிரிழந்தார். மேலும் 40க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என பல்வேறு உடல் உபாதைக்கு ஆளாகினார்கள். இதையடுத்து அந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டு ஓட்டல் உரிமையாளர் ஹம்ஜித் மற்றும் சமையலர் முனியாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆரணியில் 4வது நாளாக முகாமிட்டுள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இறைச்சி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அச்சமயம், 5 ஸ்டார் என்ற ஓட்டலில் ஆய்வு நடத்திய போது மீன், நண்டு உள்ளிட்ட 15 கிலோ தரமற்ற இறைச்சி பதுக்கி வைத்திருப்பதை கண்டறிந்த அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். அழுகிய இறைச்சியை பதுக்கி வைத்திருந்ததோடு, தரமற்ற உணவு விநியோகித்த புகாரின் பேரில் 5 ஸ்டார் ஓட்டல் உரிமையாளர் சாதிக் பாஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆரணி முழுவதும் இதுவரை 8 இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதித்துள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், 15 கடைகளில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்துள்ளார்கள். அசைவ உணவகங்களில் தரமற்ற உணவு விநியோகத்தை தடுக்க தங்களது சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.


Tags : Orangan , Arani, security officer, check
× RELATED சென்னையில் சிறுமியை கடித்து குதறிய...