×

பொன்னேரி நகராட்சியில் அருகில் உள்ள கிராமங்களை சேர்க்க எதிர்ப்பு: வரி விதிப்பு அதிகரிக்கும் என அச்சம்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் அருகில் உள்ள கிராமங்களை சேர்க்க அந்த பகுதி மக்கள் எதிர்ப்பினை தெரிவிக்கின்றனர். பேரூராட்சியாக உள்ள பொன்னேரியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதுதொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் பொன்னேரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தடப்பெரும்பாக்கம், கொடூர் ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்கள் ஊராட்சிகளை பொன்னேரி நகராட்சியுடன் இணைக்க கூடாது என்று வலியுறுத்தினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பொதுமக்களின் கருத்துக்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் போது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், பசுமை வீடுகள் உள்ளிட்ட திட்டங்கள் கிடைக்காமல் போய்விடும் என்று பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். பேரூராட்சியாக இருக்கும் போதே பொன்னேரியில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கும் பொதுமக்கள் நகராட்சியாக தரம் உயர்த்தும் போது வரி விதிப்பும் அதிகரிக்கும் என்று அச்சம் தெரிவித்தனர்.

Tags : Bonnary , ponneri
× RELATED பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில்...