×

சேலம் மேம்பால தடுப்புசுவரில் மோதி வானதி சீனிவாசன் எம்எல்ஏ மகன் ஓட்டிய கார் கவிழ்ந்தது: காயமின்றி உயிர் தப்பினார்

சேலம்: கோவை தெற்கு தொகுதி பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன். இவரது மகன் ஆதர்ஸ் (22). இவர் நேற்றுமுன்தினம் இரவு காரில் கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார்.  இரவு 11.30 மணி அளவில் அவரது கார் சேலம் பட்டர்பிளை பாலத்தில் இருந்து இறங்கும்போது தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் கார் நொறுங்கியது. அந்தநேரத்தில் அவ்வழியாக வந்த ரோந்து போலீசார்,  கார் கவிழ்ந்து கிடப்பதை கண்டனர். உனடியாக அங்கு சென்று காரில் இருந்த ஆதர்சை மீட்டனர். இதில் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

தகவல் கிடைத்ததும் சேலம் மாநகர பாஜ நிர்வாகிகள் அங்கு வந்து ஆதர்சை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் வேறொரு கார் மூலம் அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். காரை வேகமாக ஓட்டிவந்த ஆதர்ஸ், வளைவில் திரும்பும்போது விபத்தில் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : Moti Vanathi Srinivasan ,Salem , Salem, Vanathi Srinivasan MLA
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...