×

இந்தாண்டு காரீப் பருவத்தில் உணவு தானிய உற்பத்தி 15 கோடி டன் ஆக உயரும்

புதுடெல்லி: ‘நாடு முழுவதும் தென்மேற்கு பருவ மழை சீராக பெய்துள்ளதால், இந்தாண்டு காரீப் பருவகால உணவு தாணிய உற்பத்தி 15 கோடி டன் ஆக சாதனை படைக்கும்’ என ஒன்றிய வேளாண் செயலாளர் சஞ்சய் அகர்வால் கூறி உள்ளார். நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தென் மேற்கு பருவ மழை ஜூன் மாதம் தொடங்கியதும், நெல் உள்ளிட்ட காரீப் (கோடைகால) பருவ பயிர்கள் நடவு செய்யப்படும். செப்டம்பர் மாதத்துடன் தென் மேற்கு பருவ மழை ஓய்ந்த பிறகு, அக்டோபரில் அறுவடை செய்யப்படும்.

இந்நிலையில், இந்தாண்டு (2021 ஜூலை முதல் 2022 ஜூன் வரை) காரீப் பருவ உணவு தானிய உற்பத்தி குறித்து ஒன்றிய வேளாண் செயலாளர் சஞ்சய் அகர்வால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தாண்டு மழை நன்கு பெய்துள்ளது. 4வது மதிப்பீட்டின்படி கடந்த ஆண்டு காரீப் பருவத்தில் 14.95 கோடி டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டது. இந்தாண்டு பருப்பு மற்றும் நெல், உணவுதானிய உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே, நிச்சயம் உணவு தானிய உற்பத்தி 15 கோடி டன்னுக்கும் அதிகமாகவே இருக்கும். காரீப் பருவத்தில் நாட்டின் ஒட்டுமொத்த உணவுதானிய உற்பத்தி குறித்த முதல் மதிப்பீடு வரும் 15ம் தேதி (நாளை) வெளியிடப்படும்’’ என்றார்.

Tags : Caribbean , Food production
× RELATED ராம்சீதா பழத்தின் நன்மைகள்!