×

வேலூரில் இன்று காலை பணி தொடங்கியது பழைய பைபாஸ் சாலையில் சென்டர் மீடியன் .

வேலூர் : வேலூர் பழைய பைபாஸ் சாலையில் லாரி பழுது பார்க்கும் பட்டறைகள், மற்றும் கனரக வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்பட பல்வேறு கடைகள் உள்ளன. இப்பகுதியில் விபத்துகளை தடுக்கும் வகையில் சாலையின் குறுக்கே இரும்பு கம்பிகளால் ஆன சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இவற்றை சேதப்படுத்தி சாலையை கடந்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி பலர் படுகாயமடைகின்றனர்.

இந்நிலையில், கம்பியால் ஆன சென்டர் மீடியனை அகற்றிவிட்டு கான்கிரீட்டால் ஆன சென்டர் மீடியன் அமைக்க மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கான திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, 702 மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட்டால் ஆன சென்டர் மீடியன் அமைக்க ₹52 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, இரும்பு கம்பியால் ஆன சென்டர் மீடியன் அகற்றப்பட்டது. கான்கிரீட்டால் ஆன சென்டர் மீடியன் அமைக்கும் பணி இன்று தொடங்கி நடந்து வருகிறது.

Tags : Vellore , Vellore, Center Median,Old Bypass Road, construction Started
× RELATED பெண் தூய்மைப் பணியாளர் மீது பைக்கால் மோதிய இளைஞர்!