×

யோகி ஆதித்யநாத் சாதனை விளம்பரத்தில் கொல்கத்தா மேம்பாலம்... மம்தா சாதனையை திருடி விளம்பரம் என்று சாடல்!!

லக்னோ : உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் சாதனை விளம்பரத்தில் கொல்காத்தாவில் உள்ள மேம்பாலம் படம் இடம்பெற்றது சர்ச்சையாகி உள்ளது. ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான உத்தர பிரதேச அரசின் 5 ஆண்டுகால சாதனை விளம்பரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் உள்ள மேம்பாலம் வளர்ச்சியின் அடையாளமாக காட்டப்பட்டு இருந்தது.மம்தா பேனர்ஜி அரசால் கட்டப்பட்ட மேம்பாலத்தை யோகியின் வளர்ச்சி பணிக்காக காட்டுவதா என கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேசத்தில் மேற்கொண்ட மாற்றம் என்பது மம்தா பேனர்ஜி செய்த பணிகளின் புகைப்படங்களை திருடி உரிமை கொண்டாடுவதே என்று திரிணாமுல் காங்கிரசின் பொதுச் செயலாளர் அபிஷேக் பேனர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.முதல்வர்களை மாற்றுவதை தவிர பாஜகவை காப்பாற்ற வழி தெரியாத பிரதமர் மோடி, மம்தா பேனர்ஜி ஆட்சியின் சாதனை படங்களை உரிமை கோருவதாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் முகுல் ராய் குற்றம் சாட்டியுள்ளார்.இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநில அரசின் விளம்பரத்தில் ஏற்பட்ட பிழைக்கு தங்கள் விளம்பர பிரிவே காரணம் என்று ஆங்கில நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது. 


Tags : Kolkata ,Yogi Adityanath , முதல்வர் யோகி ஆதித்யநாத்
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...