×

தமிழகத்தில் பயிற்சி முடிந்த 9 இளம் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..!

சென்னை: பயிற்சி முடிந்த 9 இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் உதவி சூப்பிரண்டுகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 3 காவல்த்துறை கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பிராபகரன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில்; சென்னை பெருநகர கிழக்கு போக்குவரத்து துணை கமிஷ்னர் கே.பாலகிருஷ்ணன், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த சிபி சக்ரவர்த்தி சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி.யாக இருந்த ஓம்பிரகாஷ் மீனா சென்னை பெருநகர் கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக ஜி.சந்தீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக ரஜத் ஆர் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக அங்கித் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக வி.வி.சாய் பிரணீத் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா, திண்டுக்கல் மாவட்டம் கிராமப்புறம் துணை காவல் கண்காணிப்பாளராக அருண் கபிலன் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : TN Government , Government of Tamil Nadu orders transfer of 9 young IPS officers who completed training in Tamil Nadu ..!
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது