×

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சென்னை நீர்வழித்தடங்களை தூர்வார குறுகிய கால பணிக்கு 11.70 கோடி: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்ய நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். அதன்பேரில், தற்போது வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு 11.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.  அதன்படி, காஞ்சிபுரம் கீழ்பாலாறு வடிநில கோட்டத்தில் 13 பணிகளுக்கு 2.50 கோடியும். கொசஸ்தலையாறு வடிநில கோட்டத்தில் 14 பணிகளுக்கு 2.40 கோடியும், ஆரணியாறு வடிநில கோட்டத்தில் 12 பணிகளுக்கு 2.40 கோடியும், கிருஷ்ணா குடிநீர் விநியோக திட்டத்தில் 3 பணிகளுக்கு 50 லட்சம், கொள்ளிடம் வடிநில கோட்டத்தில் 32 பணிகளுக்கு 2.40 கோடியும், வெள்ளாறு வடிநில கோட்டத்தில் 21 பணிகளுக்கு 1.50 கோடி என மொத்தம் 95 பணிகளுக்கு 11.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த  நிதியை கொண்டு சென்னையில் முக்கிய நீர் வழித்தடங்களான கூவம் ஆறு, அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய், ஆற்றின் முகத்துவாரங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நீர் நிலைங்களில் தண்ணீர் செல்வதை தடை செய்யும் தேங்காய் மட்டை, திடக்கழிவு, தாவரங்கள் மற்றும் குப்பைகளை அகற்றுவது, அடைப்புகளை சரி செய்வது,  வண்டல் மண்ணை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்கு குறுகிய கால டெண்டர் விட்டு, விரைந்து இப்பணிகளை தொடங்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.

Tags : Chennai ,Tamil , Northeast Monsoon, Government of Tamil Nadu, Order
× RELATED கோடை வெப்பத்தை தணிக்க இரவில்...