×

18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சென்றது நியூசிலாந்து அணி

இஸ்லாமாபாத்: நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி, கராச்சியில் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியே குண்டு வெடித்ததை அடுத்து உடனடியாக நாடு திரும்பியது. அதன் பிறகு, தற்போது பாகிஸ்தான் சென்றுள்ள நியூசி. அணி 3 ஒருநாள் (செப். 17, 19, 21) மற்றும் 5 டி20 போட்டிகளில் (செப். 25, 26, 29, அக். 1, 3) விளையாடுகிறது. அனைத்து போட்டிகளும் லாகூரில் நடைபெற உள்ளன.

நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் உள்பட 8 நட்சத்திர வீரர்கள் இடம் பெறவில்லை. இதனால் டாம் லாதம் தலைமையில் சற்று பலவீனமான அணியே பாகிஸ்தானுடன் மோத உள்ளது. அரங்கில் போட்டிகளை நேரில் காண, 25 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
நியூசிலாந்து: டாம் லாதம் (கேப்டன்), ஃபின் ஆலன், ஹமிஷ் பென்னட், டாம் பிளண்டெல், டக் பிரேஸ்வெல், கோலின் டி கிராண்ட்ஹோம், ஜேக்கப் டபி, மேட் ஹென்றி, ஸ்காட் குகெலெஜின், கோல் மெக்கான்சி, ஹென்றி நிகோல்ஸ், அஜாஸ் படேல், ரச்சின் ரவிந்திரா, பிளேர் டிக்னர், வில் யங்.

Tags : New Zealand ,Pakistan , New Zealand team
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.