கேரள பிஷப் சர்ச்சை பேச்சு: முதல்வர் பினராய் கண்டிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவின் கோட்டயம் மாவட்டம் பாலா மறைமாவட்ட கத்தோலிக்க பிஷப் மார் ஜோசப்   கல்லரங்காடு, குரவிலங்காட்டில் உள்ள சர்ச்சில் நடந்த பிரார்த்தனையில் பேசிய போது, ‘காதலிப்பது போல் ஏமாற்றி இளம்பெண்களை மதம் மாற்றுவதற்குதான் லவ் ஜிகாத் என்று கூறுகின்றனர். சிலர் நார்காடிக் (போதை பொருள்)  கொடுத்து மயக்கி  மதம் மாற்றம் செய்கின்றனர். இதைதான் நார்காடிக் ஜிகாத்  என்று  அழைக்கின்றனர். இந்த விஷயத்தில் நம் சமூகத்தை சேர்ந்தவர்கள் மிகவும்   கவனமாக இருக்க வேண்டும்,’ என்று தெரிவித்தார்,  இந்த பேச்சு கேரளாவில்  கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிஷப்பின் பேச்சுக்கு கேரள முதல்வர் பினராய்  விஜயன், எதிர்கட்சி தலைவர் சதீசன் உள்பட  பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: