×

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் ரிலீஸ்

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. எந்திரன், பேட்ட ஆகிய வெற்றி படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம், அண்ணாத்த. இப்படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் வெளியீடு குறித்து கடந்த ஜூலையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் தீபாவளி பண்டிகை அன்று நவம்பர் 4ம் தேதி அண்ணாத்த படம் தியேட்டர்களில் ரிலீசாகிறது. இதை முன்னிட்டு நேற்று படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று பகல் 11 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் ரஜினிகாந்த் ஸ்டைலாக தோன்றும் காட்சி இடம்பெற்றுள்ளது. எந்திரன், பேட்ட ஆகிய படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் இணைந்துள்ளதால், இப்படத்துக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இணையதளங்களில் நெட்டிசன்கள் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களில் இதை டிரெண்டிங் செய்தனர். டிவிட்டரிலும் இந்திய அளவில் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் டிரெண்ட் ஆனது. தொடர்ந்து படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ரஜினி ஆக்ரோஷமாக தோன்றும் ஆக்‌ஷன் காட்சி அதில் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து மோஷன் போஸ்டரும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அண்ணாத்த மோஷன் போஸ்டர் என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது.

Tags : Rajinikanth ,Sun Pictures , Sun Pictures, Rajinikanth, Annatha First Look
× RELATED பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்...