உஷார் மக்களே!: சென்னை பாடி மேம்பாலத்தின் கீழ் இரவில் அடுத்தடுத்து 2 பேரிடம் கத்தி முனையில் வழிப்பறி..!!

சென்னை: சென்னை பாடி மேம்பாலத்தின் கீழ் 100 அடி சாலையில் இரவில் அடுத்தடுத்து 2 பேரிடம் வழிப்பறி நடந்துள்ளது. பெட்ரோல் இல்லாமல் பைக்கை தள்ளி சென்ற இளைஞர் ருத்ராவை 3 பேர் வழிமறித்து ஆடைகளை களைந்து வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். பகுதிநேர கேட்டரிங் ஊழியரான ருத்ராவை தாக்கி கத்தி முனையில் செல்போனை பறித்துவிட்டு மர்மக்கும்பல் தப்பியோடினர். பாடி மேம்பாலத்தின் 100 அடி சாலையில் லிப்ட் கேட்பது போல் பரத் என்பவரிடமும் நகை, செல்போன் பறித்து சென்றுள்ளனர்.

Related Stories: