×

அதிமுக சார்பில் இபிஎஸ், ஓபிஎஸ் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

சென்னை: இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: விநாயக பெருமானின் அவதார திருநாளாம் விநாயகர் சதுர்த்தி அன்று, களி மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாருக்கு எருக்கம் பூ மாலை அணிவித்து, அவருக்கு பிடித்தமான சுண்டல், கொழுக்கட்டை, அப்பம், அவல், பொரி, பழங்கள், கரும்பு போன்ற பொருட்களை படைத்து, அறுகம் புல், மல்லி, செம்பருத்தி, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்து விநாயக பெருமானை மக்கள் பக்தியுடன் வழிபடுவார்கள்.

ஞானமே வடிவான திருமேனியைக் கொண்ட விநாயக பெருமானின் திருவருளால் உலகெங்கும் அன்பும், அமைதியும் நிறையட்டும். நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும். வீடெங்கும் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும் என்று வாழ்த்தி, விநாயகர் சதுர்த்தி திருநாளை விமரிசையாக கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை அன்போடு உரித்தாக்கிக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags : EPS ,OPS VANAGER SATTI , AIADMK on behalf of EPS, OBS Ganesha Chaturthi greetings
× RELATED கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம்:...