×

மதுபாட்டில்களை பதுக்கி விற்றால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, தீயணைப்பு துறை, தமிழ்நாடு காவல் துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திருச்செங்கோடு தொகுதி உறுப்பினர் ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) பேசியதாவது: கட்சிக்காரர்கள் யாரும் காவல் நிலையத்துக்கு செல்ல முடியாது என்பது உண்மை தான். எந்த அரசியல் கட்சிகளின் இடையூறுகள் இல்லாமல் காவல்துறை இன்றைக்கு நேர்மையாக நடந்து கொண்டிருக்கிறது. டாஸ்மாக்கில் இருந்து தான் குற்றங்கள் தொடங்குகிறது. இரவு 10 மணிக்கு மேல் பார் நடத்துகிறார்கள். டாஸ்மாக்கில் பில் போட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை மாலையில் தான் எல்லா குற்றங்களும் தொடங்குகிறது. விபத்துகளும் ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்கு மேல் தான் அதிகமாக இருக்கும். அதற்கு காரணம் டாஸ்மாக் தான். இந்த டாஸ்மாக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அரை நாள் விடுமுறை விட வேண்டும்.

அமைச்சர் செந்தில்பாலாஜி: முதல்வர் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆட்சியை போல் இல்லாமல், அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக ஒரு நிமிடம் கூட டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்ட பின்பு அங்குள்ள  பாரில் மது விற்பனை செய்யக்கூடாது, சந்துக்கடை என்ற பெயரில் பதுக்கி விற்கக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி ஏதேனும் புகார்கள் வந்தால் நிச்சயம் அந்த விற்பனையாளர் மீதும் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags : Strict action against hoarding of liquor bottles: Minister warns
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...