×

போக்குவரத்து தொழிலாளர்கள் யார் ஆட்சியின்போது பழிவாங்கப்பட்டார்கள்?....திமுக, அதிமுக காரசார விவாதம்

சென்னை: சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், ‘‘அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து தொழிலாளர்கள் மீது இன்றைக்கு அறிவிக்கப்படாத போர் நடக்கிறது. அவர்கள் பழி வாங்கப்படுகிறார்கள்’’ என்றார்.
 அமைச்சர் ராஜ கண்ணப்பன்: கடந்த ஆட்சிக் காலத்தில் திமுக தொழிற்சங்கத்தை சார்ந்த தொழிலாளர்கள் எப்படி பழி வாங்கப்பட்டார்கள் என்பதை நாடு அறியும்.
நத்தம் விஸ்வநாதன்: திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் எந்த மெமோவும் வாங்கவில்லை. ஆனால் அவரை மாறி மாறி இடமாற்றம் செய்தார்கள்.
அமைச்சர் ராஜ கண்ணப்பன்: ஒரே நேரத்தில் 500 தொழிலாளர்களை மதுரையில் மாற்றினீர்கள். நாங்கள் யாரையும் மாற்றச் சொல்லவில்லை.
நத்தம் விஸ்வநாதன்: நான் உங்களைச் சொல்லவில்லை. பேரவை நிர்வாகிகள் அதிகாரங்களை எடுத்துக்கொண்டு, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளை தூக்கி அடியுங்கள் என்கிறார்கள்.
அமைச்சர் சக்கரபாணி: தீபாவளி அன்று தொழிலாளர்களை சிறையில் அடைத்த அரசு உங்கள் அரசு.
நத்தம் விஸ்வநாதன்: பெட்ரோல்-டீசல் விலையில், பெட்ரோலுக்கு 3 ரூபாய் குறைத்துள்ளீர்கள். டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை?
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: உங்கள் ஆட்சியில் பெட்ரோல்-டீசல் விலையை குறைத்து இருக்கிறீர்களா? பெண்களுக்கு பஸ்களில் இலவச பயணம் அனுமதிக்கப்பட்டிருந்ததா?
நத்தம் விஸ்வநாதன்: நாங்கள் இதை வாக்குறுதியாக கொடுக்கவில்லை.
அமைச்சர் எ.வ.வேலு: நீங்கள் 58 வயதானவர்களுக்கு பஸ்களில் இலவச பயணம் என்று சொன்னீர்கள். செய்தீர்களா? நீங்கள் செய்யாததை எல்லாம் நாங்கள் செய்கிறோம்.
நத்தம் விஸ்வநாதன்: டீசலை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். எனவே அவர்களுக்கும் விலை குறைப்பு செய்ய வேண்டும்.

Tags : DMK ,AIADMK ,Karasara , Transport Workers, Rule, DMK, AIADMK, Assembly
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...