×

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு சி.ஏ.ஏ சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை : நயினார் நாகேந்திரன் பேச்சு!!


சென்னை:இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு சி.ஏ.ஏ சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று பாஜ சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில்,இன்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.

சட்டபேரவையில் இருந்து பாஜகவினர் வெளிநடப்பு செய்த பிறகு பேரவை வளாகத்தில் சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்றத்தில் முதல்வர் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். மதநல்லிணக்கம் குறித்து முதல்வர் பேசி உள்ளார். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என சட்டமன்றத்தில் பேசி வெளிநடப்பு செய்து உள்ளோம். தமிழக முதல்வர் மட்டும் இந்து மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை, ஆனால் அவர் இன்று மத நல்லிணக்கம் பற்றி பேசி உள்ளார். நாட்டின் நலம்,  பாதுகாப்பு கருதியே மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறனார்.

Tags : Islamists ,India ,Nayanor Nagendra , நயினார் நாகேந்திரன்
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!