×

உயிர்ப்பிக்கும் தமிழர்களின் நாகரீகம்!: அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு சான்றாக விளங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கீழடி, அகரம்,  மணலூர், கொந்தகை ஆகிய 4 இடங்களில் இதுவரை 6 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. 7ம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இதில் அகரத்தில் இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு ஏராளமான பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  

அகரத்தில் தோண்டப்பட்ட ஒவ்வொரு குழியிலும் பானைகள் கிடைத்துள்ளன. சிறுசிறு பானைகள் தவிர, கெண்டி மூக்கு பானை உள்ளிட்ட வித்யாசமான பானைகளும் கிடைத்துள்ளது. தனித்தனி பானைகள் தவிர ஒரேகுழியில் 2 முதல் 5 பானைகள் வரை கிடைத்துள்ளன. இதுவரை அகரத்தில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட பானைகள் முழுமையாக கிடைத்துள்ளன. இந்நிலையில் அகரம் அகழாய்வு தளத்தில் 8 அடி ஆழத்தில் புதிதாக மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் ஒரு குழியில் 15 சுடுமண் உறைகள் கொண்ட 15 அடி உறைகிணறும், மற்றொரு குழியில் 8 சுடுமண் உறைகள் கொண்ட 8 அடி உறைகிணறும் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது 3வது உறைகிணற்றை கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் இது பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு சான்றாக விளங்குவதாக தெரிவித்துள்ளனர்.


Tags : Tamils ,Agaram , Alphabet excavation, well
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!