×

பட்டு வளர்ப்பில் அறுவடை நேர்த்தி தொழில்நுட்பம் கண்டுணர்வு பயணம்-பொன்னமராவதி விவசாயிகள் பங்கேற்பு

பொன்னமராவதி : பொன்னமராவதி பகுதி விவசாயிகள் பட்டு வளர்ப்பில் அறுவடை பின்செய் நேர்த்தி தொழில்நுட்பம் என்ற தலைப்பின் கீழ் மாநிலத்திற்குள்ளான கண்டுணர்வு பயணம் மேற்கொண்டனர்.பொன்னமராவதி வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அட்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் பட்டு வளர்ப்பில் அறுவடை பின்செய் நேர்த்தி தொழில் நுட்பம் என்ற தலைப்பில் மாநிலத்திற்குள்ளான விவசாயிகள் கண்டுணர்வு பயணமாக திண்டுக்கல் மாவட்டம், பழனி சரகத்திற்கு 50 விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டர்.

இந்த கண்டுணர்வு பயணத்தில் கலந்துகொண்ட இளநிலை உதவியாளர் ராஜேஸ்வரி பட்டு வளர்ப்பு பற்றியும் அதில் ஏற்படும் பிரச்சனைகள், தீர்வுகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். மேலும் மல்பெரி சாகுபடி தொழில் நுட்பம் அதிக மகசூல் மற்றும் வறட்சியை தாங்கி வளரக் கூடிய புதிய ரகங்கள், அதன் சிறப்பு பற்றியும். பட்டுபுழு இனங்கள் மற்றும் புழுக்களின் வளர்ச்சிக்கு ஏற்ப உணவு வழங்கும் முறை, புழு வளர்ப்பில் நல்ல குளிர்ச்சியான காற்றோட்டமான வளர்ப்பு மனை அமைப்பது பட்டுப்புழு கூடுகளில் இருந்து பட்டுநூலை பிரித்து எடுப்பது பற்றியும், அதற்கு பயன்படும் தானியங்கி இயந்திரம் போன்ற பல்வேறு இயந்திரங்கள் பயன்படுத்தும் முறை, பட்டு நூலின் தரம் மற்றும் பயன்பாடு பற்றியும் கூறினார்.

லாபகரமான பட்டு புழு வளர்ப்பில் மகசூல் மற்றும் விற்பனை பற்றியும் கூறினார். பயண ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜீவ் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் சுப்ரமணி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Farmers of Intuitive Travel ,Bonnamarawati , Ponnamaravathi: Farmers in Ponnamaravathi area under the title of Finishing Harvesting Technology in Silk Cultivation
× RELATED சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு